28 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஆவியின் கனியோ, நீடிய பொறுமை கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22
நமக்கு வரும் சில கடினமான பாடங்கள், நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்காகவே அனுமதிக்கப்படுகிறது. மனித சுபாவமானது, தனக்கு வேண்டும் என்ற விஷயத்தை விரும்பும் தருணத்திலேயே பெற்றுக்கொண்டாக வேண்டும் என்ற தன்மை உடையதாகும். நம் ஜீவியத்தை வழிநடத்துவதற்கு, நாம் தேவனை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாம் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. மேலும், நம் சிந்தையில் உள்ளதை செயலில் பிரயோகிப்பதற்கு முன், நமக்காக தேவன் என்னென்ன வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களை வைத்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்குக் காத்திருக்க வேண்டும். கொலொசெயர் 1:10-11.

