29 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். தானியேல் 3:17
தேவ நடத்துதலில் பல வித்தியாசங்கள் உண்டு. தேவப்பிள்ளைகள் தங்களைச் சில காரியங்களில் விடுதலையாக்குவார் என்றோ அல்லது கை விட்டுவிடுவார் என்றோ சிந்திக்கவேண்டுவது அவசியமல்ல. சில சந்தர்ப்பங்களில் சத்தியத்தை அறிவிக்கக்கூடாமல் கட்டப்பட்டு உதாரணமாக அந்த மூன்று எபிரேயப்புருஷர்களைப் போல் கட்டுப்பட்டு இருக்கும் போது அவர்களுடைய உறுதியான விசுவாசம் அறிக்கையிடப்பட்டு, அதன் மூலம் இவர்கள் கட்டுக்கள் விலகி தேவனை இன்னும் அதிகமாக கிட்டிச்சேரவும், அவர் மகிமையை வெளிப்படுத்தும்படி அதிக உற்சாகத்தையும் பெறும்படி செய்து, தேவ நடத்துதல் இவ்விதம் தான் இருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிக்காமல், சகலத்தையும் அவருக்கு ஒப்புக் கொடுத்து அவர் காரியங்களில் அவரே நம்மை நடத்த விரும்ப வேண்டும். அவரே நம்மை நடத்த வல்லவர். (1 கொரி. 1:9-10; மத். 10:17-20) Reprints Reference 2496:3 R2496

