27 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
.... அவன் எம்மாத்திரம்?... உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து திருப்பாடல்கள் 8:1
மனிதனுடைய சிருஷ்டிப்பின் போது, அவன் பூமியின் மீது இராஜாவாக வைக்கப்பட்டான். அவன் தனக்கு கீழ்ப்பட்டிருந்த மிருகங்களின் மீது ஆளுகை பெற்றிருந்தான். ஏதேனில் அவன் கீழ்படியாமல் போனபோது, இவை அனைத்தும் இழந்துபோயின. ஆனால், கிறிஸ்துவின் இராஜ்யத்தில், தேவன் திட்டம் செய்த அனைத்து நன்மையான காரியங்களும் நடைபெறும். பின்பு, அங்கு எந்த கொடூரமான மிருகங்களும் காணப்பட மாட்டாது. மிக முக்கியமாக, எல்லா ஜனங்களும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைக்கவும், அன்பு செலுத்தவும் கற்றுக் கொள்வார்கள். ஏசாயா 35:9.

