29 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது எசாயா 55:9
தேவனுடைய நினைவுகள், நம்முடைய நினைவுகளைப் பார்க்கிலும் சிறந்ததாகும். அவை எப்பொழுது தெளிவானதும், நியாயமானதும், நீதியானதும், அன்பானதும், ஞானமுள்ளதாகவும் இருக்கின்றது. இதன் காரணமாக, நாம் எல்லாக் காலத்திலும் அவரை நம்பலாம். தேவன், நம்மைப் பார்க்கிலும் மிகவும் பெரியவராக இருந்தபோதிலும், அவர் நம்மை நேசித்து, எப்போதும் நம்முடைய ஜெபங்களைக் கவனிக்க தயாராக இருந்து, அதன் மூலம் நாம் நம்முடைய அனுபவங்களை சகித்துக் கொள்வதற்கு தேவையான பெலனை நமக்குக் கொடுக்கின்றார் என்று நாம் அறிந்திருக்கின்றோம். ரோமர் 8:28.

