4 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள். யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 18:4
“ என் ஜனம்” என்று அழைக்கப்படத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, பாபிலோனை விட்டு வெளியேறுவார்கள். இவர்கள் அவருடைய சத்தத்தை கேட்டதினால் அவளுக்கு நேரிடும் வாதையிலிருந்து காக்கப்படுவார்கள். இந்த சத்தத்தைக் கேட்டும் வெளியேறாதவர்கள் பதர்களைப் போல அக்கினிக்கு இரையாவார்கள். தேவனுடைய பிள்ளைகள் அவருடைய சத்தத்தை அறிவார்கள். பாபிலோன் குழப்பமுள்ளதான போதகங்களை போதித்து, உண்மை தேவனையும் அவர் குமாரனையும் அறியாமல் இருளிலே இருக்கிறார்கள். ஒளியைப் பெற்றவர்கள் இருளுக்குரியவர்கள் அல்ல. (கொலோ. 1:12- 13; மத். 4:15; 2 கொரி. 6:4) Reprints Reference 2553:3 R2553

