10 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 4:12
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் அனுதின வாழ்க்கையில், இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஒரு மாதிரியான ஜீவியத்தை உண்மையோடு ஆர்வமுள்ளவர்களாக ஜீவிக்க வேண்டும். இது தற்காலத்தில் காணப்படக்கூடாத பூரணமும், மகிமையும், அழகும், பரிசுத்தமுமான ஜீவியம் ஆகும். இது இயேசு கிறிஸ்துவினிடம் மட்டும் காணப்பட்டது. இதைக் குறித்தே பவுல் சொல்லும் போது என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லாமல், “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதுபோலநீங்கள்என்னைப்பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்றார். (1 கொரி. 11:1) பவுல் பூரண ஜீவியத்தில் நமக்கோர் எடுத்துக்காட்டாக உள்ளார். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண நிலையில் அல்ல. ஆகிலும் இயேசுவின் பூரண குணங்களை தன் உள்ளத்திலே கொண்டு அவரைப் போல நடக்க தான் உருக்கமாக பிரயாசைப்பட்டது போல நாமும் பிரயத்தனப்படவே எச்சரிக்கப்படுகிறோம். நம் ஜீவியம் அநேகருக்கு முன்பாக ஒரு நல்ல மாதிரியான ஜீவியமாக இருக்க வேண்டும். (மத். 5:16) Reprints Reference 1886:1 R1886

