3 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். நீதிமொழிகள் 4:20, 22
சரீரத்தின் பேரில் நம்முடைய சிந்தை எவ்வளவாக இருக்கிறது என்று ஒரு சிலர் புரிந்து கொண்டுள்ளனர். இப்படியாக தேவன், நாம் சுத்த இருதயமுள்ளவர்களாகவும், பெருந்தன்மையும், பரிசுத்த சிந்தை உடையவர்களாகவும் மனரீதியாகவும், சரீர பிரகாரமாகவும் நம்மை சிருஷ்டித்துள்ளார். இதற்கு மாறாக, அவர் வார்த்தைகளை கவனியாமலும், செவிகொடாமலும் இருப்பவர்கள் தங்கள் சரீரத்தை அழிவுக்கு ஒப்புக் கொடுத்து சகல துர் இச்சைகளால் நிறைந்திருப்பார்கள். இவைகள் மரணத்துக்கேதுவாக இவர்களை வழி நடத்தும். தேவனுடைய வார்த்தையோ ஞானத்தைப் போதித்து, அறிவை உணர்த்தும் அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்போருக்கு தம்முடைய வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். (சங். 119:49-50; 107:19-20) Reprints Reference 2014:6 R2014

