24 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:3, 4
இந்த உறுதியான வார்த்தையின் மூலம் நமக்கு எவ்வளவு ஆறுதலும் சமாதானமும் உண்டாயிருக்கிறது. இந்த வார்த்தைகள் ஜீவனுக்கேற்றவைகள். இவை நம்மில் நம்பிக்கையை உண்டு பண்ணுகிறது. நாம் மாமிசத்தில் பூரணராக இல்லாதிருந்தும் வாஞ்சையும் விருப்பமும் உள்ள இருதயமுடையவர்களை தேவன் அவர்கள் விருப்பத்திற்கேற்றதாகப் பூரணப்படுத்த சித்தமுள்ளவராக இருக்கிறார். நமது சரீரம் அழிவுக்கேதுவானதாக இருந்தாலும் நாம் ஆவியின்படி நடக்க முடியும். நாம் ஆவியின் தேவைக்கேற்றபடி நடக்க முடியாவிட்டாலும் நம் சிந்தனைகள் ஆவிக்குரியதை சிந்தித்து நடக்க முடியும். நம் எண்ணங்களும் பூரணமானதாக இருக்கும் போது இப்படிப்பட்ட ஆத்துமாக்களைப் பூரணப்படுத்த தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார். (எபி. 7:19; அப். 13:38-39) Reprints Reference 3060:1 R3060

