24 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக விடுதலைப் பயணம் 25:2
இஸ்ரயேலர், எகிப்தில் அடிமைகளாக இருந்த சமயத்தில், வெகு சில பூலோக உடைமைகளையே பெற்றிருந்தனர். ஆனால், தேவன், அவர்களிடம் ஆசாரிப்புக் கூடாரம் கட்டுவதற்கு அவர்களிடம் உள்ளதைக் கொடுக்கும்படி கேட்டபோது, எகிப்திலிருந்து அவர்கள் வெளியேறினபோது எகிப்தியர்கள் அவர்களுக்குக் கொடுத்த விலையேறப்பெற்ற பொன் மற்றும் ஆபரணங்கள் உட்பட, தேவைக்கும் அதிகமானவைகளை அவர்கள் வாஞ்சையோடு கொடுத்தனர். பின்னர், தேவன் இதற்குமேல் வேறெதுவும் கொண்டுவர வேண்டாம் என அவர்களிடம் கூறினார். இது நாம் பின்பற்றத்தக்க எத்துனை நன்மாதிரியாய் உள்ளது. 2 கொரிந்தியர் 9:7

