19 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனசாட்சியும் அசுத்தமாயிருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுத-க்கிறார்கள். தீத்துவுக்கு எழுதிய திருமுகம் 1:15, 16
இது எவ்வளவு கடிமானதோர் காரியம் என்பதை காண்கிறோம். தேவ பிள்ளைகள் எவ்வளவு ஜாக்கிரதையுள்ளவர்களாக ஜீவிக்க எச்சரிக்கப்படுகிறார்கள். இவர்கள் சுத்த இருதயமும், புத்தியுள்ளவர்களுமாய் இருந்தால் மட்டும் போதாது. தங்கள் கிரியைகளிலே தேவனுடைய வார்த்தைகளை உண்மையாகக் கொண்டு அதன்படி ஜீவிக்கவும் வேண்டும். நாம் நம்மை அடிக்கடி சோதித்தறிந்து நடந்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும். தேவ அன்பை நாம் எந்த அளவுக்கு காட்டி வருகிறோம் என்பதை, அவர் நமக்கு போதித்துக் கொடுத்த அன்பின் கட்டளையைக் கைக்கொண்டு நடப்பதின் மூலமாகவே நாம் வெளிப்படுத்த முடியும். (தேவனிடம் உள்ளான அன்பு இல்லாதவன் அவரை அறிந்தும் மறுதலிக்கிறவனாக இருப்பான்). (யாக். 2:19-20, 24-26) Reprints Reference 2516:6 R2516

