19 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது சபை உரையாளர் 1:4
பூமி என்னும் நம்முடைய கிரகம், என்றென்றும் நிலைத்திருக்கும் என தேவன் நமக்கு உறுதியளித்திருக்கிறார். அது எவ்விதத்திலும் அழிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ, அல்லது முழுவதுமாக அழிக்கப்பட்டோ போவதில்லை. தேவன், மனுக்குலத்திற்கான ஒரு வீடாக பூமியை ஆயத்தப்படுத்தியிருப்பதினால், ஏற்றக்காலத்தில் அது ஒரு பூரண நிலைக்குக் கொண்டு வரப்படும், மேலும், பூரணமடைந்த மனுக்குலம் அதில், என்றென்றும் ஜீவனோடு இருப்பார்கள். ஏசாயா 45:18-19

