5 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4:3
தேவசித்தம் இன்னதென்பதை நாம் வேதத்தின் மூலம் அறியும் போது நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு அல்ல, முதலாவது நம்மை முற்றிலும் அடக்கி, நம் சித்தத்தை வெறுத்து, நம்மை நாமே ஆளக்கூடியவர்களாகக் காணப்பட வேண்டும். பின்பு நாம் விசுவாச வீட்டாருக்குச் செய்யும் ஊழியமும், மற்ற மனிதர்களுக்குச் செய்யும் உதவிகளும், இன்னும் பல நற்குணங்கள் அடங்கிய கிரியைகள் யாவும் நம்மை அடக்கி ஆளும் ஒரே காரியத்தில் அடங்கியுள்ளது. நாம் முதலாவது பரிசுத்தராக விளங்குவது மிக அவசியமானது. அப்போஸ்தலன் சொன்னது போல நாம் எவ்வளவாக தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்குப் போதித்தாலும், நமக்குண்டான யாவற்றையும் ஏழைகளுக்கு கொடுத்தாலும் அல்லது ஒரு நல்ல காரியத்திற்காக தன் உயிரையும் தியாகம் செய்தாலும் அன்பு இல்லாவிட்டால், பிதா மற்றும் குமாரனின் ஆவி இல்லாவிட்டால் அவன் அவருடைய பார்வையிலே ஒன்றுமில்லாதவனாக காணப்படுவான். (1 கொரி. 13:1-7; 1 தெச. 5:14- 18) Reprints Reference 2412:1 R2412

