5 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
நான் (இயேசு) பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன் என்றார் யோவான் நற்செய்தியை 12:32
நம்முடைய கர்த்தர், சிலுவையின் மீது மரணத்தில் உயர்த்தப்பட்டு, பின்பு உயிர்த்தெழுப்பப்பட்டதன் விளைவாக, அவர் இறுதியில் எல்லா மனுக்குலத்தையும் தம்மிடத்தில் இழுத்துக் கொள்வார். இங்கு இழுத்துக்கொள்ளுதல் என்பது, கர்த்தரையும் அவருடைய நோக்கங்களையும் குறித்ததான அறிவு அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று பொருள்படுகிறது. இயேசு, எல்லாரையும் இழுத்துக்கொள்ளும் இந்த அதிகாரத்தை தற்போது செயல்படுத்தவில்லை. காரணம், இந்த யுகத்தில் அவரிடம் வருகிறவர்களே, தேவனால் இழுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர். 1 தீமோத்தேயு 2:4

