16 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
இந்த ஊழியம் குற்றபடாதபடிக்கு நாங்கள் யாதொன்றிலும், இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும் எங்களைத் தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 6:3, 8
தேவனுடைய ஊழியத்தை நாம் முழு முயற்சியுடன் செய்து தேவ ஆசீர்வாதத்தையும் தயவையும் பெற்றவர்களாக இருக்கும் போது சில சமயங்களில் நாம் கைவிடப்பட்டவர்களைப் போலவும், இருள் நம்மை சூழ்ந்து கொண்டது போலவும் காணப்படும். நம் உடன் ஊழியர்களும் நம்மை தேவ கிருபையினின்று மறக்கப்பட்டவர்களாக கருதக்கூடும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நமக்கு அவசியமானதே. இது நம் விசுவாசத்தை பலப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த சூழ்நிலைகளில் வெளிச்சத்தில் தனியாக நடப்பதை காட்டிலும், இருளில் தேவனோடு நடப்பது நன்மையாக இருக்கிறது என்று நாம் மகிழ்ச்சியுடன் துதித்து பாட வேண்டும். ஆகவே, இப்படிப்பட்ட அனுபவங்கள் வழியாக கடந்து போகும் போதுதான், நம்முடைய விசுவாசம், நம்பிக்கை பெருகும். நாமும், தேவனுடைய கரத்தை பிடித்துக் கொண்டு இருளை கடக்க முடியும். (ரோம. 14:12-13; 1 கொரி. 10: 32-33) Reprints Reference 2886:3 R2886

