17 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு நற்செய்தியை 11:29, 30
கிறிஸ்துவின் இந்த நுகத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவானதாக இருக்குமென்று தேவ வார்த்தை உறுதிப்படுத்துகிறது. சுமை எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு ஆசீர்வாதங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தற்காலத்தில் இது எவ்வளவு கொடூரமாக காணப்படுமோ அவ்வளவுக்கு அதிகமாக மகிமையும் பிரகாசமுமாக அவர்கள் ஜீவியம் காணப்பட்டு, பரலோக ராஜ்யத்திற்குரியவர்களாக அமைக்கப்பட இது முழு நம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த மேன்மையை நம் முன்வைக்கும் பொழுது சகல பாரமும் இலகுவாகவே காணப்படும். மேலும் கிறிஸ்து நம்மோடிருப்பதால் இந்த நுகம் மிக மெதுவாகவே காணப்பட்டு சுமை இலகுவாக்கப்படுகிறது. (2 கொரி. 6:14; கலா. 5:1; ) Reprints Reference 2625:5 R2625

