17 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
ஏற்றகாலத்திலே, ஆசீர்வாதமான மழை பெய்யும் எசேக்கியேல் 34:26
நம்முடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் அன்பு, புசிப்பதற்கான உணவு, தங்க இருப்பிடம், மழை மற்றும் வெயில், தேவனுடைய வார்த்தையின் மூலம் ஆறுதல் ஆகியவைகளே ஆசீர்வாதங்கள் என நாம் பெரும்பாலும் கருதிக்கொள்கிறோம். இந்த யுகத்தில் இப்படிப்பட்ட அநுகூலங்களில் வெகு சிலவற்றையே பெரும்பாலானோர் பெற்றுள்ளனர். ஆயிரவருட யுகத்தில், தேவன், இந்த கிருபைகளை அனைவருக்கும் அளவில்லாமல் அனுப்புவார். இவைகளோடு கூட, இறுதியாக மனதார வாஞ்சையும், கீழ்ப்படிதலும் உள்ள அனைவருக்கும் ஜீவன் பெறும் ஆசீர்வாதத்தையும் அனுப்புவார். மல்கியா 3:10

