15 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
அவருடைய வசனத்தை கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். யோவான் எழுதிய முதல் திருமுகம் 2:5
கீழ்ப்படிதல் நமக்கு கொடுக்கப்பட்ட பரீட்சை. நாம் எந்த அளவில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக் கொண்டு ஜீவிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவனுடைய அன்பும் நம்மில் பூரணப்படும். கிறிஸ்துவின் சிந்தை நம்மில் காணப்படுமேயானால் தேவ ஆவி நம்மை வழி நடத்தி நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு நாம் அவருடைய வழிகளிலே நல்ல காரியங்களை செய்ய உதவும். இந்த வழிகளில் நம் ஜீவியம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைய வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்திலே இணைக்கப்பட எழுப்பப்படும் நாள் வரை நாம் பூரணராக காணப்படாதிருந்தாலும் தேவனிடம் நாம் நெருங்கிய தொடர்பு கொண்டு அவர் அன்பில் நிலைத்திருக்கத்தக்கதாக ஆவியிலும் சிந்தையிலும் எப்பொழுதும் ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும். (நீதி. 4:4-6; சங். 51:10) Reprints Reference 2236:5 R2236

