16 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார் திருப்பாடல்கள் 91:4
ஒரு தாய் கோழியை அதின் குஞ்சுகளை சேர்த்துக் கொள்வதை என்றாவது கவனித்திருக்கிறீர்களா? அந்த தாய் கோழி, தனது ஒவ்வொரு குஞ்சின் மீது அதிகளவு கவனம் கொடுத்து, ஆபத்தின் அறிகுறியை ஆரம்பத்திலேயே அறிந்து, அவைகளுக்கு ஒரு அழைப்பு விடுக்கும். அவைகள் விரைவாக தாயினிடத்தில் ஓடி அதன் செட்டையினுடைய பாதுகாப்பின் கீழ் அடைக்கலம் புகும். நமது கர்த்தருடைய பாதுகாப்பின் பராமரிப்பிற்கு இது எவ்வளவு அருமையான உதாரணமாக இருக்கிறது. அவருடைய செட்டைகள் விசாலமாய் இருப்பதினால், எல்லா ஆபத்துகளிலும், நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம். சங்கீதம் 17:8

