23 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:3
அப்போஸ்தலர்கள், சபையின் அங்கங்களுக்கு நிருபங்கள் எழுதியபோது, இந்த வாழ்த்துதலை அல்லது இந்த ஜெபத்தையே அடிக்கடி பயன்படுத்தினார்கள். கிருபை என்பது "இரக்கம்" மற்றும் சிலசமயங்களில் "தயவு" என்றும் பொருள்படும் அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்துவிலுள்ள கிறிஸ்துவர்களுக்கு தேவனுடைய கிருபையும் இரக்கமும் சமாதானத்தின் ஆசீர்வாதமும் அளிக்கப்படும்படி ஜெபித்தபோது, அவருடைய வார்த்தைகள், அவருடைய உடன் கிறிஸ்துவர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்பதைக் காண்பித்தது. 2 தெசலோனிக்கேயர் 1: 2

