25 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:8
அப்போஸ்தலனாகிய பவுல், நம்மிடம், உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் என்று கூறகிறார். இவை அனைத்தும் நிறைந்திருக்கும் தேவனையும், நம்முடைய அன்பின் கர்த்தர் இயேசுவையும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மீதான அவர்கள் அன்பையும், இரட்சிப்புக்கான ஆச்சரியமான திட்டத்தையும் நாம் ஆழ்ந்து சிந்தித்தால், நம் இருதயங்கள் அன்பையும், துதியையும் ஏறெடுக்கும். மல்கியா 3:16

