27 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
பொய் நாவை கர்த்தர் வெறுக்கிறார் நீதிமொழிகள் 6:1
உண்மையில்லாத வார்த்தைகள் தவறியாகிலும் வந்துவிடாதபடி, நாம் நம்முடைய நாவுகளை எவ்வளவு கவனமாகக் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மிகைப்படுத்தின அல்லது முற்றிலும் தவறான காரியங்களை நாம் பேசுவதை நாமே உணரும்போது உடனடியாக அவைகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். மிகைப்படுத்தின அல்லது உண்மையற்ற காரியங்களைக் குறித்ததான பேச்சிலிருந்து நாம் முற்றிலும் விலகுவதற்கு முன்பு, இவ்வாறு நம்மை திருத்தும் விஷயங்களை நாம் அநேகமுறை செயல்படுத்த வேண்டியதாய் உள்ளது. சங்கீதம் 119:29

