29 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:16
நீதி ஒரு நிறைவை ஏற்படுத்தினாலும் அன்பானது அந்த அளவையைக் குலுக்கி இன்னும் அதிகமாக அதை நிரப்பி வழியச் செய்யும். இதை உரிமையுடன் கேளாமலும் அல்லது அதன் குறைவைக் குறித்து முறையிடாமலும் தேவ தயவால் நமக்கு அருளப்பட்டதை மேன்மையாகக் கருதி அதை நமக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த அன்பை நம் உள்ளத்திலே பதிய வைக்க வேண்டும். இதில் நாம் சற்றும் குறைவு படக்கூடாது. தேவ அன்பு நம்மில் பூரணமாக விளங்க வேண்டுமானால் நாம் அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருக்கு பிரியமுள்ளவர்களாக ஜீவிக்க வேண்டும். அன்பில்லாதவன் தேவனை அறியாமலிருக்கிறான். தேவனை அறிந்தவன் அவர் வார்த்தைகளைக் கைக்கொண்டு அதன்படி ஜீவிக்கிறான். இதனால் தேவ அன்பு அவனில் பூரணப்பட்டிருக்கும். (யோவா. 4:18-21; 2:15-16) Reprints Reference 3071:1 R3071

