26 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
அன்பு, நீடிய சாந்தமும், தயவுமுள்ளது. கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:4
தப்பிதம் செய்தவர்களைக் கடிந்து கொள்வது, தேவனுடைய ஜனங்களுக்கு அடுத்ததாயிராமல், அன்புடன் தயவாக அவர்கள் குற்றங்களை விளக்கிக்காட்டி, சத்தியத்தில் எந்த அளவுக்கு அவர்கள் குறைவுபட்டுள்ளனர் என்பதை உணர்த்த வேண்டும். நற்பண்பு கிறிஸ்தவ குணத்தின் ஒரு பாகமாகும். உலகத்தில் இது வேஷம் தரித்த தோற்றமுடையதாக இருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கு இது பொய்த் தோற்றம் உடையதாயிராமல் முழு இருதயத்தோடு உண்மையாக வளர்ந்த அன்பைக் காட்டுகிறதாக உள்ளது. அன்பு, சாந்த குணத்திற்கு நம்மை வழிநடத்திப் பொறுமையையும், தயவையும் பெருகச் செய்கிறது. கீழ்ப்படியாதவரிடம் கூட கடுமையாகப் பேசவொட்டாமல், தயவுடன் புத்தி சொல்ல நம்மை ஏவுகிறது. (2 கொரி. 6:3-10) Reprints Reference 3194:2 R3194

