10 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களாயிருந்து இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:1, 2
ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும், சகோதர அன்பிற்கும், இந்த வார்த்தைகள் எவ்வளவு உற்சாகத்தைத் தரக்கூடியதாக உள்ளது. இது எவ்வளவாக பொறுமையையும் மனத்தாழ்மையையும், உதவுதலையும், சகோதரரை ஆதரிப்பதிலும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. இவை யாவற்றிலும் தேவ ஆவி பெருகிக் காணப்படுகிறது. மேலும் சரியான பாதையில் அழைத்து செல்கிறது. ஒவ்வொரு சகோதர, சகோதரியும் “ஆறுதலின் மகன்” என்று பேர் பெற்றுக் கொண்ட பர்னபாவைப் போலொத்த குணமுடையவர்களாக விளங்க வேண்டும். தேவனுக்கும், அவர் குமாரனுக்கும் பிரதிநிதியாக இருக்க நாம் சத்திய ஆவியிலே நாளுக்கு நாள் பெருகி, ஒவ்வொருவரும் சீயோனுக்கு (திருச்சபைக்கு) ஆறுதலளிக்கப் பிரயத்தனப்பட வேண்டும். (கொலோ. 3:12-17) Reprints Reference 3436:6 R3436

