16 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:18
கிறிஸ்துவுடன் ஒருமித்து நடந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்ற ஒப்புக் கொடுத்த இருதயமுள்ள யாவரும் அதிகாலையில் தங்களுக்கு ஆசீர்வாதமளிக்க வேண்டி மன்றாடுவது மட்டுமல்ல அந்நாளின் இரவிலே தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சகலத்திலும் ஸ்தோத்திரம் செலுத்தி அந்நாள் முழுவதும் அவரை நினைத்துத் தங்கள் வழிகளைக் காத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அவருடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, அதோடு அவர்கள் செய்யும் சகல காரியங்களும், தேவ சித்தத்திற்குட்பட்டதாக இருந்து இவைகளில் தேவ நடத்துதல் அவர்களோடிருந்ததை உணர்ந்து அதற்காகவும், அவருக்கு நன்றி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். நாம் இப்படிச் செய்வது, தேவ சித்தமாக இருக்கிறது. இடுக்கமான பாதையில் பிரயாணம் பண்ணும் ஒவ்வொருவரும் தங்களது அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதி செய்வது பிதாவின் சித்தமாயிருக்கிறது. (எபே. 4:16-21) Reprints Reference 3136:6 R3136

