24 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப் போல் ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும். யோவான் நற்செய்தியை 17:11
திருச்சபையைக் குறித்து நம் இரட்சகர் கூறும் அழகான வார்த்தைகள் மூலம், தெய்வீகக் குடும்பத்தாருக்கு அளிக்கப்படப் போகிற மகிமைக்குரிய ஆசீர்வாதத்தை குறித்து ஓரளவு இங்கே காணக்கூடியவர்களாக இருக்கிறோம். இது ஒருமைப்பாட்டின் நோக்கமாயிருக்கிறது. நம்பிக்கையில் ஒருமைப்பாடு, இரக்கத்திலே ஒருமைப்பாடு, அன்பிலே ஒருமைப்பாடு, மகிமையிலும், கனத்திலும் ஒருமைப்பாடு. இந்த ஒருமைப்பாடு, கிறிஸ்துவிற்கும் பிதாவிற்கும் இடையே முன்பே இருந்ததாக நம் இரட்சகர் கூறுவதோடு திருச்சபையும் இந்த ஒருமைப்பாட்டிற்குள் நடத்தப்பட விரும்பி ஜெபித்தார். திருச்சபையார் இதைப் பெறுவது இனி வரும் காரியமாக உள்ளது. (யோவா. 17:21-26) Reprints Reference 3160:3 R3160

