20 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். திருத்தூதர் பணிகள் 17:23
அப்போஸ்தலன் இங்கே உபயோகித்த முறையை நாமும் கடைபிடிப்பது நலமானது. முன் இருந்து செய்யப்பட்டு வரும் காரியங்கள் உண்மையானது என்று அநேகர் கூறுவதுண்டு. ஆகவே, நாம் அப்போஸ்தலனைப் போல உண்மை சத்தியம் என்பது கூட ஒரு புதிய கொள்கை அல்ல. பழையவைகளே, புதிய நற்செய்தியுமல்ல, பழைய நற்செய்தியே (சுவிசேஷம்) என்றும் இவை ஆபிரகாமுக்கு முன் அறிவிக்கப்பட்டு பின்பு இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும், அப்போஸ்தலர் மூலமாகவும், வெளிப்படுத்தப்பட்டவைகள் என்று காண்பிக்க வேண்டும். தற்போதைய தவறானப் போதகங்கள், இருளான காலத்தில் தோன்றினவை என்றும், இப்பொழுது போதிக்கப்படுவது புதிதான சத்தியம் அல்லவென்றும், இவை ஆதிகாலத்தில் தேவனால் அருளப்பட்டதென்றும், எடுத்துக்கூறி உண்மையை வெளிப்படுத்த வேண்டும். (2 தீமோ. 4:2-4) Reprints Reference 3139:4 R3139

