13 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாதிபதிகளாயிருக்கிறோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20
ஒவ்வொரு கிறிஸ்தவனும், இந்த வார்த்தைகளைத் தங்கள் சிந்தனைகளில் எப்பொழுதும் வைத்திருப்பார்களானால், அவர்கள் குண லட்சணங்களில், இது எவ்வளவாக அவர்களைக் கனப்படுத்துகிறதாக இருக்கும்! எவ்வளவு பெரிய வல்லமையை அளிக்கக் கூடியதாக உள்ளது! நம்முடைய குடியிருப்புப் பரலோகத்தில் இருக்கிறது என்று அப்போஸ்தலன் சொல்லி இருக்கிறார். நாம் இப்பூமியில் வாழ்ந்தாலும் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல. பரலோக இராஜ்யத்திற்குரியவர்களாக மாற்றப்பட்டு அதன் ஸ்தானாபதிகளாகவும், பிரதிநிதிகளாகவும் இவ்வுலகில் நியமிக்கப்பட்டிருக்கிறோம். இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அருளப்பட்டுள்ள பதவியைக் காத்து, வார்த்தையிலும், கிரியையிலும் சகலத்தையும் கிறிஸ்துவின் நாமத்திலே செய்யக் கடமைப்பட்டுள்ளனர். (எபே. 6:5-10, 18-20) Reprints Reference 3330:2113 R3330

