27 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
இது முதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாமிசத்தின்படி அறியோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:16
அப்போஸ்தலன் இங்கே நம்முடைய மாமிச பெலவீனங்களை குறித்துப் பேசவில்லை. நாம், நம்முடைய எல்லா மாமிச பெலவீனங்களையும் எதிர்த்து, அதை விட்டு விலக முயற்சிக்க வேண்டும். புதிய சிருஷ்டிகள், தங்களை இப்படிப்பட்ட பெலவீனங்களிலிருந்து கடுமையாய் சீர்த்திருத்திக் கொள்ள வேண்டும். பெலவீனமான மரணத்திற்கேதுவான சரீரத்தில், பாவம் ஆளாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதோடு கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்ட ஒவ்வொருவரின் மாமிச பெலவீனங்களையும் கண்டுபிடித்துத் தவறுகளை உணர்த்த வேண்டும். இவர்கள் ஆவிக்குரியவைகளை சிந்திக்கும்படி செய்ய எச்சரிக்கப்பட வேண்டும். புதிய சிருஷ்டியாக மாற்றப்படாதவர்கள், மாமிச சிந்தனையுள்ளவர்கள்; புதிய சிருஷ்டியாக மாற்றப்பட்டவர்கள் ஆவியின் சிந்தையுடையவர்களாயிருப்பார்கள். (1 தீமோ. 5:20-21; 2 கொரி. 1:17) Reprints Reference 3202:3 R3202

