4 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி..... திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 2:24, 25
தேவ ஜனங்களில் சிலர் சத்தியத்தைப் பிறருக்கு எடுத்துரைத்து வரும் போது சில காரியங்களில் அதிக அளவுக்கு சுய நம்பிக்கையுள்ளவர்களாகப் பேசி தேவ பெலனை நம்பாமல் தங்களையே நம்பி இதனால் பல தீமைகளைத் தங்களுக்கு வருவித்துக் கொள்வதுண்டு. சாந்தகுணம் தேவனுடைய பார்வையில் ஓர் ஆபரணம். சத்தியத்துடன் இது இணைக்கப்பட்டது. சத்தியத்தை நாம் பேசும் போது எவ்வளவு பலத்துடன் பேசினாலும், கோபங் கொள்ளாமல் சாந்தத்தோடும், பணிவோடும் தேவன் பேரில் நம்பிக்கை உள்ளவர்களாகப் போதிக்க வேண்டும். கேள்வி முறையிலான போதனை மிகவும் பலமுள்ளதாக காணப்படுகிறது. (1 தீமோ. 3:2-7) Reprints Reference 2559:3 R2559

