5 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நம்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:28
இந்தக் காரியத்தை நினைவில் கொண்டு தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை தேவசித்தம் என்று எண்ண வேண்டும். சகலத்திலும் திருப்தி உள்ளவர்களாக இவை யாவும் நன்மைக்கென்றே இருக்கும் என்று உணர்ந்து தேவனுக்கு விரோதமாக ஒரு போதும் முறுமுறுத்தல் கூடாது. ஒரு வேளை தேவன் இப்படிப்பட்ட காரியங்களின் மூலமாக நம்மைச் சீர்திருத்தி அவர் சேவைக்குரியவனாக மாற்றச் சித்தம் கொண்டிருக்கலாம். நாம் நம்முடைய குறைகளை நிதானித்து அறியத் தகுதியற்றவர்கள் என்பதை நாம் முதலாவது உணர வேண்டும். அது போலவே தேவசித்தத்தை அறியவும் நாம் தகுதியற்றவர்கள் என்பதை நினைவில் கொண்டு இப்படிப்பட்ட காரியங்கள் நமக்குச் சம்பவிப்பது நாம் அவருடையவர்களாயிருக்க இது யாவும் தேவசித்தம் என்று அறிய வேண்டும். (எபே. 1:4-12) Reprints Reference 2562:6 R2562

