3 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
தேசத்தின் ஜனங்களையும், மறு ஜாதியான ஸ்திரிகளையும் விட்டு விலகுங்கள். எஸ்ரா 10:11
உண்மை கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் சமுத்திரத்தில் இருக்கும் ஒரு கப்பலுக்கு ஒப்பாவார்கள் என்றும், அந்த சமுத்திரம் கப்பலுக்குள் போகாதிருக்கும் வரை அது ஆபத்துக்குள்ளாகாதென்றும், ஒருவர் சரியாகக் கூறியிருக்கிறார். தற்கால கிறிஸ்தவ சமுதாயம் உலகில் அன்னியரை அனுமதித்து, பேர் கிறிஸ்தவர்களாக மாற்றி கிறிஸ்தவ சமுதாயத்திற்கே கேடு விளைவித்துள்ளது. உண்மை வணக்கத்தை இவர்கள் விலக்கி பல தவறுகளை நுழைத்து ஆதி கிறிஸ்தவர்களின் போதகங்கள், உண்மை வணக்கங்கள் யாவையும் மாற்றிவிட்டார்கள். புறஜாதி மக்களோடு சம்பந்தம் கலப்பதும், அவர்கள் மத்தியில் இருப்பதும், தேவனால் விலக்கப்பட்டது. (2 கொரி. 6:14-18) Reprints Reference 2512:4 R2512

