3 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தரிடத்தில், மனமகிழ்ச்சியாயிரு: அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் திருப்பாடல்கள் 37:4
கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்பது என்பது அவருடைய சித்தத்தையே நம்முடைய அன்பின் மையமாக வைப்பது என்று பொருள்படும். அதாவது, நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய சித்தத்திற்காகவும் வழிநடத்துதலுக்காகவும் நாம் எதிர்ப்பார்த்திருப்பதைக் குறிக்கும். ஏனெனில், அவருடைய சித்தமே நம் சித்தம் ஆகும். அவருடைய சித்தமே நம்முடைய சித்தமாக இருக்கின்ற காரணத்தினால், நமக்கான அவருடைய நோக்கங்களுக்கும், திட்டத்திற்கும் நம்முடைய இருதயத்தின் விருப்பங்கள் இசைவாய் இருக்கும் பட்சத்தில், அவைகளை (இருதயத்தின் விருப்பங்கள்) நமக்கு வழங்குவதில் அவர் பிரியம் உள்ளவராக இருப்பார். ஏசாயா 58:14.

