19 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:22
இதன் பொருள் யாதெனில், தீமையான எந்த ஒரு காரியமும் எவ்வளவாக நமக்குக் கீர்த்தியையோ, ஆஸ்தியையோ கொடுக்கக்கூடியதாக இருந்தாலும், அவைகளை நாம் விட்டு விலக வேண்டும். இவைகள் உலகத்திற்குரியவைகள். சில சந்தர்ப்பங்களில் நம் பார்வைக்கு நலமாகத் தோன்றி மற்றவர்களுக்கு (அடுத்தவர்களுக்கு அது பாதகமாகக் காணப்படுமேயாகில், அவற்றையும் நாம் விட்டு விலகுவது நலமானதே. தீமையானவைகளை மட்டுமல்ல, தீமையாகத் தேன்றும் சகலக் காரியங்களையும் நாம் விட்டு விலக, பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்தும். இது தேவனிடத்தில் சத்தியத்தின் மூலம் நாம் நெருங்கி நடக்க பிரயோஜனமாக இருக்கும். (1 பேது. 3:9-17) Reprints Reference 3137:5 R3137

