23 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு, இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது. கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13
அன்பு பிரதானமானதும், மிக நேர்த்தியுமானது. ஆதலால் இது சதாகாலத்திலும் நிலைத்து நிற்கக்கூடியது. விசுவாசமானது நம்மை அன்பிலே பூரணப்படுத்துகிறது. இது பூரணப்படும் போது, பரம பிதா நமக்கு வாக்குத்தத்தம் பண்ணின யாவற்றையும் பெற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாகி, நற்கனிகளைத் தரக்கூடியவர்களாக மாற்றுகிறது. அன்பு ஒரு காலத்திலும் அழிந்து போகாது. தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருக்குத் துவக்கம் இல்லாததால், அன்பிற்கும் துவக்கம் கிடையாது. ஏனென்றால், அன்பு அவரின் குணலட்சணம். இது அவரின் மனச்சார்பு. அவர் சதா காலங்களிலும் இருக்கிறது போல, அன்பும் சதா காலங்களிலும் இருக்கிறது. அன்பில்லாதவன் தேவனை உடையவனல்ல. (1 யோவா. 4:7-13) Reprints Reference 3151:5 R3151

