23 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 1:16
மனுக்குலத்திற்கான தேவனுடைய அன்பை குறித்ததான சத்தியங்களும், அவர்களுக்கான அவருடைய திட்டங்களுமாகிய கிறிஸ்துவின் சுவிசேஷம் அருமையாக இருக்கின்றபடியினால், அவைகளுக்கு செவிசாய்க்கின்ற யாவருக்கும் இதை அறிவிக்க அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதை செய்ய அவர் வெட்கப்படவில்லை. ஏனெனில், சுவிசேஷம் என்பதற்கு, "நற்செய்தி" என்று பொருளாகும். இந்த நற்செய்தியை நம்முடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதைப் பார்க்கிலும், நலமானதாக நாம் வேறொன்றையும் அவர்களுக்கு கொடுக்கவோ, செய்யவோ முடியாது. 2 தீமோத்தேயு 1:8.

