25 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். யோவான் எழுதிய முதல் திருமுகம் 3:2
திருச்பையார் வெகு சீக்கிரத்தில் உயிர்த்தெழுதல் மூலம் நம் இரட்சகருக்கு ஒப்பாக மாற்றப்பட்டு, அவர் இராஜ்யத்திலே மகிமையை, அவரைப் போலவே பெற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயமானது. இந்த வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்தி, பலப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் நாம் கிறிஸ்துவுக்கும், விசுவாச வீட்டாருக்கும் ஊழியம் செய்ய நம் இருதயங்களை ஏவுகிறது. இந்த வார்த்தைகள் முற்காலங்களில் அவருடையவர்களுக்கு நங்கூரமாக இருந்திருக்குமேயாகில், முடிவின் காலத்தில் அதாவது அவர் வெளிப்படும் காலத்தில் ஜீவிக்கிற நமக்கு இது எவ்வளவு அதிகமான உற்சாகத்தைத் தரக்கூடியதாக உள்ளது. (ரோம. 8:16-18, 28-30) Reprints Reference 3193:6 R3193

