25 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ... உண்மையுள்ளவன் யார் 1 சாமுவேல் 22:14
தேவனுடைய இருதயத்திற்கேற்ற மனுஷனாக தாவீது இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அது ஏன் என்று சங்கீத புத்தகங்களைப் படித்தால் புரிந்துகொள்ளலாம். தாவீது அடிக்கடி துதியின் வார்த்தைகளையும், தேவனுக்கான அன்பையும், அவருடைய அற்புதமான சிருஷ்டிப்பையும் குறித்து எழுதி இருக்கிறார். தாவீது தேவனுடைய மாட்சிமையை நன்கு புரிந்துவைத்திருந்து அவருக்கு மகிமை, கனம் மற்றும் துதிகளை ஏறெடுத்தார். 1 சாமுயேல் 18:12.

