17 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:19
தேவ ஆவி, அவருடைய ஜனங்களிடையே “ஒரு பரிசுத்த அன்பின் அக்கினிக்கு” ஒப்பிடத்தக்கது. தெய்வீக வசனத்தின் மூலம் இந்த அக்கினி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. இது ஆவியில் நடத்தப்படுவதற்கு ஒரு வழி காட்டியாகவும் இருந்து, திருச்சபையாரைத் தேவனிடம் வழி நடத்தக் கூடியதுமாயிருக்கிறது. இந்தத் திருச்சபை ஞானத்திலும், அன்பிலும், தேவனோடு ஐக்கியத்திலும் இருந்து, இவ்வுலகிலே ஒரு விளக்கைப் போலவும் இருக்கிறது. மலையின் மேல் இருக்கிற பட்டணத்தைப் போல் உலகத்திற்கு ஒளியாகவுமிருக்கிறபடியால், அப்போஸ்தலன் இந்த பரிசுத்த ஆவியை அவித்துப் போடாதிருக்க எச்சரிக்கிறார். (எபே. 4:29-32; 1 தீமோ. 1:6-8) Reprints Reference 3137:2 R3137

