18 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:21
தேவனுடைய ஜனம், தாங்கள் கேட்கும் ஒவ்வொரு காரியத்தையும் நிதானித்து, அவைகளைச் சோதித்து உண்மையாக இவைகள் தேவனையும், அவர் வார்த்தைகளையும் குறித்தவைகளா என்று முதலாவது அறிய வேண்டும். தங்கள் சிந்தனையை அதிகமாக உபயோகித்து நன்மையானவைகளையும், உண்மையானவைகளையும் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும். இவைகளைச் சோதித்தறியும் போது, சுய சிந்தனை உள்ளவர்களாக இராமல், பரிசுத்த ஆவியின் நடத்துதலால் நன்மையானவை இன்னதென்று, தீமையானவை இன்னதென்றும் பகுத்தறிந்து, ஆவியின் வளர்ச்சிக்கு நன்மையானவைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். மற்றெல்லாவற்றையும் விட்டு விலக வேண்டும். (1 யோவா. 4:1-3) Reprints Reference 3137:4 R3137

