29 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால் நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள். யாக்கோபுஎழுதிய திருமுகம் 4:3
முதலாவதாக நாம் ஜெபம் பண்ண கற்றுக் கொள்ள வேண்டும். தேவனிடம் கேட்க வேண்டிய காரியங்களையே அல்லாமல் வீண் வார்த்தைகளை அலப்பக் கூடாது. நமக்குத் தேவையானது இன்னதென்பதை அவர் அறிந்து இருக்கிறார். அப்படி செய்வதற்கு நாம் கேட்கிறதற்கு தீவிரமாயும் பேசுவதற்கு தாமதமாயும், அவரது வார்த்தையையும், பாடங்களையும் கேட்கிறதற்கு தீவிரமாயிருக்க வேண்டும். நாம் நமது சொந்த சித்தத்தின்படி விண்ணப்பம் பண்ணாமல் பிதாவின் சித்தத்தின்படி செய்வதே கிறிஸ்தவனின் குணலட்சணம் ஆகும். இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீதிமான் ஜெபம் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்படுகிறது. (1 ராஜா.3:8-14) Reprints Reference 3217:6 R3217

