29 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 2:12
கிறிஸ்துவின் இராஜ்யத்தில், அவரோடுகூட ஆளுகை செய்வது என்பது, நம்முடைய உண்மையான வாஞ்சையாக இருந்தால், நாம் சோதிக்கப்படுவதின் மூலம் நம்முடைய உண்மையை நிரூபிக்க வேண்டியது நமக்கு அவசியம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த பரீட்சைகள் யாவும், நம்முடைய குணநலன்களை வளர்த்துக் கொள்ளவும், நம்முடைய பரம பிதாவினிடத்திலும், அவருடைய குமாரனாகிய இயேசுவினிடத்திலும் நாம் கொண்டுள்ள அன்பு மற்றும் கீழ்ப்படிதலை நிரூபிக்கவும் நமக்கு உதவுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது. 2 பேதுரு 4:13.

