30 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம், அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு நற்செய்தியை 5:16
இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார். அவர் மூலம் ஒளியைப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியிலே ஒளியாயிருக்கிறோம். நமது நற்கிரியைகளின் மூலம் நமது பிதாவை மகிமைப்படுத்த வேண்டும். விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டிலே வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும் படிக்கு ஒளியினிடத்திற்கு வருகிறான். (யோவா. 3:20; 1 பேது. 2:10-12) Reprints Reference 3686:4 R3218

