30 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார் எசாயா 43:12
தேவன் இஸ்ரயேலருக்கு அநேக வாக்குத்தத்தங்கள் கொடுத்திருந்தார். அவைகளில் சில ஏற்கனவே நிறைவேறிற்று. மற்றவை இனி நிறைவேற இருக்கிறது. வாக்குத்தத்தங்களின் ஒரு பகுதியாக யூதர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பி, மீண்டும் ஒருமுறை ஒரு தேசமாக உருவாகிய சம்பவம் இந்த இருபதாம் நூற்றாண்டில் நிறைவேறிற்று. இவரே தேவன் என்று நிரூபிப்பதற்கும், தேவனிடத்தில் உண்மையாயிருந்து வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும், இஸ்ரயேலரே சாட்சிகளானார்கள். ஏசாயா 44:8.

