20 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம் வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை நீதிமொழிகள் 16:16
அதிகளவில் செல்வத்தை சம்பாதிப்பதைப் பார்க்கிலும், தேவனுடைய பரிபூரண குணலட்சணங்களாகிய ஞானம், நீதி, அன்பு, வல்லமையையும், மனுக்குலம் அனைவருக்குமான அவருடைய திட்டத்தையும் குறித்ததான அறிவை பெற்றுக்கொள்வதே அதிக முக்கியமானதாகும். நீதிமொழிகள் 3:13,14.

