6 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. திருப்பாடல்கள் 91:10
தேவபிள்ளைகளை எந்தத் தீங்கும் அணுகாது. மாமிசப் பிரகாரமான சில காரியங்கள் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும், தாங்கள் மாமிசத்திற்குரியவர்கள் அல்லவென்று உணர்ந்து, புதிய சிருஷ்டிகளாக மாற்றப்பட்டதை எண்ணும் போது மாமிச சிந்தை இவர்களை விட்டு விலகிச் செல்லும். இதன் மூலம் இவர்கள் தங்களை எந்தத் தீங்குக்கும் வி லக்கிக் காத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். அதோடு எந்த உலக இச்சைகளுக்கும் தங்களை உட்படுத்த ஒப்புக் கொடுக்கமாட்டார்கள். நாம் தேவன் பேரில் நம்பிக்கையிழந்து விசுவாசத்தில் பெலவீனப்படும் போது மட்டுமே சோதனை நம்மை மேற்கொள்ளும், தீங்கும் நம்மை அணுகும். தேவ அன்பையும், வாக்குத்தத்தங்களையும் இழந்துபோவோம். (சங். 34:14-22) Reprints Reference 3232:1 R3232

