18 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். விடுதலைப் பயணம் 33:14
தேவன் தமது பிள்ளைகளுடன் சதா காலத்திலும் இருக்கிறார். அவர் நம்மைக் குறித்து எப்பொழுதும் நினைவு கூறுகிறார். நமக்குத் தேவையானவைகளைக் கவனித்து வருகிறார். நம்மைச் சகல ஆபத்துக்களினின்றும் காப்பாற்றி வருகிறார். உலகப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய வழிகளிலும் போஷித்து வருகிறார். நம்முடைய இருதயத்தைச் சோதித்தறிந்து, நாம் எவ்வளவாக அவரில் அன்பு கூறுகிறோம் என்று அறிந்தும் வருகிறார். நம்மை அநேகச் சந்தர்ப்பங்களில் சிட்சித் து வழி நடத்தி, அவருடன் எப்பொழுதும் தரித்திருக்க விரும்புகிறார். நாம் எத்தருணத்திலும் அவரைக் கூப்பிட்டாலும், நமக்குச் செவி சாய்க்கச் சித்தமுள்ளவராகவும் இருக்கிறார். நாம் அவரில் விசுவாசத்தில் நிலை கொண்டிருப்போமேயானால் எவ்வளவான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். (யாத். 40:34-38) Reprints Reference 3251:4 R3251

