16 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
யேகோவா தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; யேகோவா தமது ஜனங்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். திருப்பாடல்கள் 29:11
கிறிஸ்தவ ஜீவியத்தில் நமக்குண்டாகும் பல பாடுகளையும், சோதனைகளையும் நாம் மேற்கொள்ளும் போது இவை நமக்குப் பொறுமையையும், அனுபவத்தையும், சகோதர அன்பையும், இரக்கத்தையும் வளர்க்கச் செய்கிறது. (இது, தேவனுடைய ஜனங்களுக்கு அருளப்படும் தேவபலன்.) நாம் தாங்கக்கூடாத சோதனைகள் நம்மை நெருங்கும் போது, தேவனிடம் நமது பாரத்தை வைத்து ஜெபிக்கக் கடமைப் பட்டுள்ளோம். தேவன் தாமே, நம்மை தீமையின்று விடுவித்து, நன்மையானதை தரும்படி அவருடைய உதவியை ஜெபத்திலே நாடவேண்டும். (சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். இவர்கள் சமாதானத்தை அடைந்து, தேவனாலே வழி நடத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறாதாயிருக்கிறது.) (சங். 12:1-2; ரோமா. 5:1-4) Reprints Reference 2006:2 R2006

