10 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால், அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:29
அப்போஸ்தலன் இந்த வார்த்தைகளை எழுதும் போது சத்தியமில்லாத, தப்பறையான போதகங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கக் கூடும். கெட்ட வார்த்தைகளும், மற்ற காரியங்களும் மாமிசத்துக்கிணையானதால்,இவை பிசாசினால் உண்டானவை. அவதூறான காரியங்களைப் பேசுவது தவறானது. தேவ கட்டளைக்கும், மனித சட்டத்திற்கும் விரோதமானது. உண்மையாக இருந்தாலும் அல்லது பொய்யாக இருந்தாலும் அவதூறு பேசுவது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். தேவ கட்டளையும், மனித சட்டமும், இதைச் செய்வது தவறானது என்பதில் ஒத்திருக்கிறது. இதற்கு மாறாக, பக்திக்குரிய வார்த்தை ஒருவனை ஜீவன் பெறும்படிச் செய்யும். (மத். 12:34-37) Reprints Reference 2444:3 R2444

