19 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவான் நற்செய்தியை 17:17
ஆவியின் ஜீவியத்தில் ஒருவர் முன்னேறி அதிகமாக வளர்வது, சத்திய வசனத்தைப் பெற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமாகவே முடியும் என்று நம் இரட்சகர் வற்புறுத்துகிறார். கிறிஸ்துவின் மூலமாகவோ அல்லது பரிசுத்த ஆவியின் மூலமாகவோ, தங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டதென்று சொல்பவர்களுக்கு தேவ பிள்ளைகள் எச்சரிப்பாய் இருக்க வேண்டும். சத்தியத்தை முற்றிலும் அறியாது இவ்விதம் பேசுவது, மன மேட்டிமையையும், தற்பெருமையையுமே காட்டுகிறதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தைவிடத் தங்களிடம் மேலான போதகர் உண்டென்று நினைப்பதுண்டு. இப்படிப்பட்டவர்களை சாத்தான் சுலபமாக தன் வசம் எடுத்துக் கொள்வான். (சத்தியத்தை அறிவதன் மூலமே நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம்.) (1 பேது. 1:22-25) Reprints Reference 3251:5 R3251

